search icon
என் மலர்tooltip icon
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான்.
    • மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து பேசி வருகிறார்.

    அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 57 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்துக் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்" என்று பேசி இருந்தார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என்று கையேந்தி நிற்பது?

    ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்து வந்தோம். அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனாலும் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

    செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சு பற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடக்கிறது. காமராஜர் எண்ணங்களை இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில்தான் அவரது பெயரால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்து முடிக்கிற ஆட்சிதான் இப்போது நடக்கிறது.

    அவர் கல்விக்கு வித்திட்டார். அந்த கல்வியை ஆலமரமாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் எல்லா நடவடிக்கையையும் எடுத்துள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவ செல்வங்கள் 100-க்கு 100 வாங்கும் நிலை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உருவாகி இருக்கிறது.

    எவ்வளவு காலம்தான் இன்னொரு கட்சியிடம் தொகுதி கேட்டு கையேந்துவது. அந்த நிலை மாற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசி இருக்கிறார். அது அவரது ஆசை. அது நிறைவேறுமா? என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான். ஆகவே செல்வப்பெருந்தகை அதே ஆசையில் கூறி இருக்கிறார். அவரது ஆசையை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது மக்கள் விருப்பம்தான். எனவே காங்கிரஸ் செல்வாக்கை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் இன்று பேசும்போது கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும் கூட, மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.

    தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது. பேசவும் கூடாது. நல்ல வேளை தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும் அது காமராஜர் ஆட்சிதான்.

    மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.

    காமராஜர் ஆட்சி என பெயர் வைக்கலாம். திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்தது.
    • சி-விஜில் செயலி மூலமாக பொதுமக்கள் புகார் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 'சி-விஜில்' என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை வழங்கலாம் என அறிவித்தது. அதன்படி இந்த செயலி வழியாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், இதுவரை 4.24 லட்சத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதில் 409 புகார்கள் விசாரணையில் உள்ளன.

    இதுவரை வந்துள்ள புகார்களில் 100 நிமிடங்களுக்குள் 89 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது என தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

    • அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப்பன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
    • சத்யராஜ் இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களுள் சத்யராஜ் முக்கியமானவர். எந்த கதாப்பாத்திரத்தை கொடுத்தாலும் அவருக்கென தனி பாணியில் அந்த கதாப்பாத்திரத்தை வடிவமைத்து நடிப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    நேற்று அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப்பன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில். இன்று மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

    சத்யராஜ் இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இது முதல்முறையல்ல 2019 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் முதலில் நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கினார் ஆனால் அந்த திரைப்படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.

    ஆனால் சத்யராஜ் நடிக்கும் படம் ஒரு பான் இந்தியன் படமாக உருவாகவுள்ளது, இந்தாண்டுக்கு படப்பிடிப்பு பணி தொடங்கப்படும் என நம்பப்படுகிறது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

    நாத்திகத்தை பற்றியும், ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபாடு இல்லாத ஒரு நபர் சத்யராஜ், பெரியாரின் கொள்கையை அதிகம் பின்பற்றுபவர். அவர் எப்படி மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க சம்மத்தித்தார் என நெட்டிசன்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்.
    • ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஒன்பதாவது உயிர் ராமையா ஆவார். கடந்த 14-ஆம் தேதி தான் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதிநிறுவன பணியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த மூன்றாவது நாளில் அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு உயிர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டு இது பா.ஜ.க. சதி என குற்றம்சாட்டியது.
    • ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பிபவ் குமார் புகார் கொடுத்தார்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாக் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று செய்தனர்.

    • நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'.
    • ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    நடிகர் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வெப்பன்'. இந்த படத்தில் தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், ராஜிவ் மேனன், ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, 'வெப்பன்' படத்தில் நடித்துள்ளார்.

    குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'வெப்பன்' திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் டீசர் வெலியிடப்பட்டு மக்கள் கவனத்தை பெற்றது.

    படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சத்யராஜ் இப்படத்தில் யாருமே அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியுமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யராஜை அனைவரும் கேங்ஸ்டர், கோஸ்ட் என்று பலரும் பல வித பெயர்களை வைத்து அழைக்கின்ரனர். அவரை அழிக்கும் மிஷனில் வசந்த் ரவி ஈடுப்படுகிறார். கிராபிக் காட்சிகள் மிரட்டலாக டிரைலரில் செய்தி இருக்கிறார்கள். இதனால் படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராகுல்காந்தி பா.ஜ.க. மீண்டும் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்று உறுதி பட கூறி வருகிறார்.
    • இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது மக்களின் விருப்பமாக அமைந்து விட்டது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிறது.

    அதனால் நிதானமிழந்து ஆத்திரம் பொங்க கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசி வந்தவர், 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி கோவிலை புல்டோசரால் இடித்து விடுவார்கள்" என்று அபாண்டமாக காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார். இத்தகைய பேச்சுகளை பேசுகிற ஒருவர், 10 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்தது இந்தியாவிற்கே அவமானமாகும். இப்படி நச்சுக் கருத்தை கூறுகிற ஒரு பிரதமரை பெற்றதற்காக ஒவ்வொரு இந்தியரும் வெட்கி தலைகுனிய வேண்டும். எதையாவது பேசி, எப்படியாவது எந்த உத்தியையாவது கையாண்டு மூன்றாம் முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கிற பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் வாய்க்கு வந்தபடி கருத்துகளை கூறிக் கொண்டிருக்கிறார்.

    தொடக்கத்தில் 370, 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசிய பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்று தோல்வி பயத்தில் அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த கணிப்புகளுக்கு மாறாக மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு படுதோல்வி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.

    தலைவர் ராகுல்காந்தி பா.ஜ.க. மீண்டும் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்று உறுதி பட கூறி வருகிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது மக்களின் விருப்பமாக அமைந்து விட்டது. எனவே, மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தினால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாயின் உடல் தகனம் செய்வதற்கு முன் அதற்கான செலவுகளை சகோதரிகள் மூன்று பேரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்று சைதி ரெட்டி கூறினார்.
    • ஊர் பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சைதி ரெட்டி இறுதியில் தகனத்தை செய்ய ஒப்புக்கொண்டார்.

    உயில் எழுதுவது ஏன் முக்கியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

    79 வயதான வேமு லக்ஷ்மம்மா என்ற மூதாட்டிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைய மகளுடன் வசித்து வந்தார் வேமு லக்ஷ்மம்மா. சில நாட்களுக்கு முன் குளியலறையில் விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தால் வேமு லக்ஷ்மம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.

    அதுவரை தாயாரை கண்டுகொள்ளாத மகனான சைதி ரெட்டி, சகோதரிகளிடம் சண்டையிட்டு மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதை தொடர்ந்து மூதாட்டி வேமு லக்ஷ்மம்மா கடந்த செவ்வாய்கிழமை இரவு காலமானார்.

    இதையடுத்து மூதாட்டி மரணத்தை தொடர்ந்து, அவர் விட்டு சென்ற ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களால் ஏற்பட்ட தகராறால் அவரது இறுதிச் சடங்குகளை செய்வதில் இருந்து குடும்பத்தினர் பின்வாங்கினர்.

    ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களில் மருத்துவ செலவுக்கு 6 லட்சம் ரூபாயும், மீதமுள்ள 15 லட்ச ரூபாயை சைதி ரெட்டி எடுத்துக்கொண்டுள்ளார். மூன்று மகள்களும் தங்களுக்குள் 25 சவரன் தங்க நகைகளை சமமாக பகிர்ந்து கொண்டனர்.

    இருப்பினும் தாயின் உடல் தகனம் செய்வதற்கு முன் அதற்கான செலவுகளை சகோதரிகள் மூன்று பேரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்று சைதி ரெட்டி கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மூதாட்டியின் உடல் ஆம்புலன்சிலும், பின்னர் ஐஸ் பெட்டியிலும் என இரண்டு நாட்களாக வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கிராமப் பெரியவர்கள் தலையிட்டு, இறுதிச் சடங்குச் செலவுகளை ஏற்க சைதி ரெட்டியை வற்புறுத்திய பின்னரே பிரச்சனை தீர்க்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சைதி ரெட்டி இறுதியில் தகனத்தை செய்ய ஒப்புக்கொண்டார்.

    ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நாம் வாழும் போது தாய், தந்தையரிடம் அன்பு காட்டுவதில்லை. அவர்கள் இருக்கும் போது நாம் சொத்துக்காக சண்டை, பெற்றோரை யார் பார்ப்பது என்பதில் சண்டை என தொடங்கி நம்முடைய பாசத்தை காட்ட தவறுகிறோம். ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் இருக்கும் பாச உணர்வு நம்மில் பல பேருக்கு இருப்பதில்லை. தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காத சொத்து தாய், தந்தை பாசம் மட்டுமே என்று உணர்ந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

    • ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி 661 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விவாத நிகழ்ச்சியில் நேற்று (மே 17) பங்கேற்ற சுனில் கவாஸ்கர் மற்றொரு கருத்தை கூறியுள்ளார்.

    ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி 661 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இருப்பினும் ஆராம்ப போட்டிகளில் தனது சொந்த சாதனைகளை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்திய கோலி சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதே பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைய காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

     

    ஹைதராபாத்துக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் 15 ஓவர்கள் வரை விளையாடிவிட்டு கடைசியில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் என்று முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த விராட் கோலி , நான் அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறேன். மற்ற யாருக்காகவும் விளையாடவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நேற்று (மே 17) பங்கேற்ற சுனில் கவாஸ்கர் மற்றொரு கருத்தை கூறியுள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விராட் கோலி தன்னுடைய கேரியரை துவங்கிய போது அது நிலையான கேரியராக இல்லை. இப்போது நாம் பார்க்கும் விராட் கோலிஇந்த நிலைமைக்கு வர தொடக்க காலகட்டங்களில் கோலியின் ஆட்டத்துக்கு பலம் சேர்த்து அவருக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த எம்எஸ் தோனியே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

     

    • சித்தார்த்தின் 40-வது படத்தை ஸ்ரீகணேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் படித்தவர் சித்தார்த். அதன் பிறகு மணி ரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

    அதன்பிறகு வெளியான காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4 போன்ற படங்கள் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் தன்னை நிலநடுத்திக்கொண்டார் நடிகர் சித்தார்த்.

    அதுமட்டுமில்லாமல் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

    இதனைத்தொடர்ந்து நடிகை அதிதி ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும், இந்த படம் உலகளாவிய ஈர்ப்பு கொண்ட கதையைக் கொண்டிருக்கும். எல்லோரது இதயங்களிலும் எதிரொலிக்கும் படமாக அமையும். இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×